நானொரு விளையாட்டு பொம்மையா
ராகம்: நவரச கானடா
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு
(நானொரு)
அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு
(நானொரு)
----------------------------------------------------
ஸ்ரீசக்ர ராஜ
வரிகள்: அகஸ்தியர்
ராகம்: ராகமாலிகா
தாளம்:
[செஞ்சுருட்டி]
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரி
ஞான வித்யேஷ்வரி ராஜராஜேஸ்வரி
(ஸ்ரீசக்ர)
[புன்னாகவராளி]
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி
(ஸ்ரீசக்ர)
[நாதனாமக்ரியை]
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னாள் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஷ்வரி
(ஸ்ரீசக்ர)
[சிந்து பைரவி]
துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி
(ஸ்ரீசக்ர)
--------------------------------------------------
கற்பகவல்லி நின்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
ராகம்: ராகமாலிகா
தாளம்:
[ஆனந்த பைரவி]
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி
(கற்பகவல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பகவல்லி)
[ஆனந்த பைரவி]
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
(கற்பகவல்லி)
[கல்யாணி]
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாசிகள் வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா
(கற்பகவல்லி)
[பாகேஸ்ரீ]
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே உன் சேய் நான்.........
லோகேஸ்வரி நீயே உலகினில் நீ துணையம்மா
(கற்பகவல்லி)
[ரஞ்சனி]
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா
(கற்பகவல்லி)
------------------------------------------------
கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்
வரிகள்: பெரியசாமித் தூரன்
ராகம்: பிருந்தாவனி
தாளம்: ஆதி
கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்க்
காட்சியளிப்பது பழனியிலே
(கலியுக)
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்
(கலியுக)
கண்முதற் கடவுளின் கண்மணியாய் வந்தான்
கார்த்திகைப் பெண்டிர் அணைப்பில் வளர்ந்தான்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான்
(கலியுக)
------------------------------------------
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று
வரிகள்: அருணகிரி நாதர்
ராகம்: ஹம்சானந்தி
தாளம்:
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்று
மாறுபடு சூரரை வதைத்த முகமொன்று
வள்ளியை மணம்புணர வந்த முகமொன்று
ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே
------------------------------------------
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்:
ராகம்:
தாளம்:
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை)
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையின் கடலே - நீ
(கற்பனை)
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை)
-----------------------------------------------
சரவணபவ எனும் திருமந்திரம்
ராகம்: ஷண்முகப்ரியா
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
சரவணபவ எனும் திருமந்திரம் தனை
சதா ஜபி என் நாவே - ஓம்
(சரவண)
புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணில் உதித்த
போத ஸ்வரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து
(சரவணபவ)
மண்மிசைக் கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
மாயை அகல பேரின்ப நெறியில் சேர்க்கும்
தண்மதி நிகர் குளிர் கருணை நிலவுமெழும்
ஷண்முகப்ரிய சடாக்ஷர பாவன
(சரவணபவ)
-------------------------------------------------
யார் ஆடினார்
ராகம்; சாருகேசி
இயற்றியவர்: மதுரை சேதுராமன்
பல்லவி
யார் ஆடினார் இனி யெவரா டுவார்
அம்பல வாணன் சிதம்பர நாதனைப் போல் (யார் ஆடினார்)
அனுபல்லவி
மீன விழி சிவகாமி தனை
மணந்து மெல்லடி தூக்கியே புன்னகையுடனே (யார் ஆடினார்)
சரணம்
பூதங்கணங்கள் புன்முறுவலோடாட
பாவையர் செவ்வாயால் பண்ணிசைத்தே பாட
மாதவன் மனம் குளிர மங்கை சிவகாமியுடன்
பொற்சதங்கை ஒலிக்க சிற்சபையில் நடனம் - (யார் ஆடினார்)
------------------------------------------------------
நீ இரங்காயெனில்
ராகம்; அடானா
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பல்லவி
நீ இரங்காயெனில் புகல்யேது; அம்பா
நிகில ஜகன்நாதன் மார்பில் உறை திரு (நீ இரங்காயெனில்)
அனுபல்லவி
தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்க்கும் நீ தாயல்லவோ; அம்பா (நீ இரங்காயெனில்)
சரணம்
பாற்க்கடலில் உதித்த திருமணியே
சௌபாக்கியலக்ஷ்மி என்னை கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும்
மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும்; அம்பா (நீ இரங்காயெனில்)
--------------------------------------------------------
எப்படி பாடினரோ
ராகம்; கர்னாடக தேவகாந்தாரி
தாளம்: ஆதி
இயற்றியவர்: சுத்தானந்த பாரதி
பல்லவி
எப்படி பாடினரோ திருவடியார் அப்படி பாட நான் ஆசை கொண்டேன் சிவனே ( எப்படி )
அனு பல்லவி
அப்பரும் சுந்தரரும் ஆளுடை பிள்ளையும் அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே ( எப்படி )
சரணம்
குருமணி ஷங்கரரும் அருமை தாயுமானாரும் அருணகிரிநாதரும் அருட்ஜோதி வல்லலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி கன்னித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் (எப்படி)
---------------------------------------------------------
தாமரை பூத்த
ராகம்: ஹிந்துஸ்தானிகந்தரி
தாளம்: ஆதி
இயற்றியவர்; திருச்சி ஜி.தியாகராஜன்
பல்லவி
தாமரை பூத்த தடாகமடி - செந்
தமிழ்மணத் தேன் பொங்கி பாயுதடி - ஞானத் ( தாமரை )
அனு பல்லவி
பாமழையால் வற்றா பொய்கையடி - தமிழ்
பைங்கிளிகள் சுற்றி பாடுதடி - ஞானத் ( தாமரை )
சரணம்
காவிய சோலை அதன் கலை( கவி ) அழகே - பெரும்
கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே ( பெருஞ்சுவையே )
ஆவி மகிழும் தமிழ் தென்றல் அதே - இசை
அமுதினை கொட்டுது பார் இதனருகே - ஞானத் ( தாமரை )
----------------------------------------------------------
தாயே ஏழைபால் தயை
ராகம்: பைரவி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பல்லவி
தாயே ஏழைபால் தயை செய்வாயே
தயாபரி சங்கரி - சகல லோக நாயகி ( தாயே )
அனுபல்லவி
நாயேனுன் பாலன்றி எங்கே செல்வேன்
நளின மிருதுள சுகுமார மனோகர
சரணயுகல மருள தருணமிதுவே என் ( தாயே )
சரணம்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
எட்டாத பேராசை கோட்டை கட்டி
புண்ணாக நெஞ்சம் புலம்பும் மடம்(இடம்)
போதும் இனி முடியாது உனதடி
இப்போது அடைய இது போது வரம் அருளும் என் ( தாயே )
----------------------------------------------------------
பாவயாமி ரகுராமம்
ராகம்: சாவேரி ( ராகமாலிகா )
தாளம்: ரூபகம்
இயற்றியவர்: சுவாதி திருநாள்
பல்லவி (சாவேரி)
பாவயாமி ரகுராமம் | பவ்ய சுகுணாராமம்
அனுபல்லவி
பாவுகவிதரணபரா- | பாங்கலீலாலசிதம்
ஸரிகஸரி, மபதபத, | ரிஸநிதநிதபமகரிஸத.|
ஸரிம, கரிமபத, பமபதஸ, நிதநிதபமபத|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 1 (நாட்டைகுறிஞ்சி)
தினகரான்வயதிலகம் | திவ்யகாதி சுதசவனா||
வனரசிதசுபாஹுமுக | வதமஹல்யா பாவனம்||
அனன்கமீசசாபபங்கம் | ஜனகசுதாப்ரானேசம்||
கனகுபிதப்ருகுராம | கர்வஹரமிதசாகேதம்||
மகஸ, நி.த.நி.ஸ,ரிகம | நிதம, கரிகமபகரிஸ|
நி.த.நி.ஸரிகமநிதநிபதநிஸநிதநிஸரிகமகசநி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 2 (தன்யாசி)
விஹிதாபிஷேகமதா | விபினகதாமார்யவாசா||
சஹிதசீதா சௌமீத்ரிம் | ஷாந்ததமா ஷீலம்||
குஹநிலையகதம் சித்ர| கூடாகதபரத டத்தா||
மஹிதரத்னமயபாதுகம்| மதனசுந்தராங்கம்||
நி.ஸக,மபகமப, நிஸ | ரிஸரிநிஸபதபக, ரிஸ|
நிஸகமபக, மபநிஸப, நிஸகரிஸநிதபநிஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 3 (மோஹனம்)
விததண்ட காரண்யகதா | விராதடாலனம்||
சுகரிதக தஜாடதானுபம்| இடவைஷ்ணவாஸ்த்ரம்||
பதகவரஜ டாயுனூதம்| பஞ்சவடீவிஹிதவாசம்||
அதிகோரசூர்ப்பணகாவசனா| கதகராதிஹாரம்||
க, , பகரிகரிஸத.ஸரி| க, , பதஸதபகரிஸரி
கபககரிஸரிகரிரிஸதஸரிகரிகபகபதபதஸ|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 4 (முகாரி)
கனகமிருகரூபதாரக | லமாரிசஹரமிஹா சு||
ஜனவிமத தசாஸ்யஹ்ருத| ஜனக ஜான்வேஷானம்||
அனகம் பம்பாதீரசங்கட ஆஞ்சனே நமோமணி||
தனுஜசக்யஹரம் வாலி| தனுதலனாமீசம்||
ப, , மகரிஸ,நி.த.ஸரி| ம, , கரிஸரிமபமநித|
ஸ, ஸநிதபப, மகரிஸநி.த.ஸரிமபநிதமபதஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 5 (பூர்வி கல்யாணி)
வானரோத்தமசஹிதவா| யுசுனுகரார்பித||
பானுசசதபாஸ்வரபவ்ய| ரத்னாங்குலீயம்||
தேன புனரணீத | ன்யூன சூடாமணி தர்சனம்||
ஸ்ரீநிதிமுததிதீர | ஸ்ருதவிபீஷணா மிலிதம்
க, மகரிஸத.ஸ,ரிகம| ப, ,தபஸநிதபமகரி|
கமபம, பக,, மரி, கஸ, ரிக, மபதபஸ, நி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)
சரணம் 6 (மத்யமாவதி)
கலிதவரசேதுபந்தம்| கலனிசீசுமபிசிடாசன||
டலனாம்ரு தசகண்ட| விதராநமடிதீரம்||
ஜ்வலன பூதஜனகசுதா| சஹிதம்யாத சாகேதம்||
விலசிதபட்டாபிஷேகம்| விஸ்வபாலம்பத்மநாபம்||
ரி, மரிமபநி, பமபநி| ஸ, , நிஸநிபபமமரிஸ|
ராகம்1: ரிபமரிஸநி. ஸரிமப
ராகம்2: தபஸ, நிதபமகமகரி
ராகம்3: ஸ, நி. த.. ஸரிமக ரிஸரி
ராகம்4: க, தபகரிஸரிகபதஸ
ராகம்5: ரிஸத, பதபக, ரிஸ
ராகம்6: நி. ஸமகமநிதநிபதநிஸ
ராகம்0: கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத|
(பாவயாமி ரகுராமம்)
------------------------------------------------------------
ஹிமகிரி தனயே
ராகம்: சுத்த தன்யாசி
தாளம்: ஆதி
இயற்றியவர்: முத்துஸ்வாமி தீக்ஷிதர்
பல்லவி
ஹிமகிரி தனயே ஹேமலதே அம்பா ஈஷ்வரி ஸ்ரீ லலிதே மாமவ
அனுபல்லவி
ரமா வாணி சம்சேவித சகலே ராஜராஜேஷ்வரி ராம சகோதரி
சரணம்
பாசாங்குஷேஷு தண்டகரே அம்பா பராத்பரி நிஜ பக்தபரே(பத்மஹரே)
அசாம்பர ஹரிகேச விலாசே ஆனந்த ரூபே அமிர்த ப்ரதாபே
--------------------------------------------------
பஞ்சாத்ஷட் பீட ரூபிணி
ராகம்: கர்நாடக தேவகாந்தாரி
இயற்றியவர்: முத்துஸ்வாமி தீக்ஷிதர்
பல்லவி
பஞ்சாத்ஷட் பீட ரூபிணி மாம் பாஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
அனுபல்லவி
பஞ்சதசாக்ஷரி பாண்டிய குமாரி பத்மநாப ஸகோதரி ஷங்கரி
சரணம் 1
தேவி ஜகஜனனி சித்ரூபிணி
தேவாதினுத குருகுஹ ரூபிணி
தேசகால ப்ரவர்த்தினி மஹா
தேவ மனோ(ஹரிணி)(லாசினி) நிரஞ்சனி
சரணம் 1
தேவராஜ முனி சாப விமோசனி
தேவகாந்தார ராக தோஷினி
பாவ ராக தாள விஸ்வாசினி
பக்த ஜனப்ரிய பலப்ரதாயினி.
Himagiri tanayE in suddha dhanyAsi was composed by Harikesanallur MuththaiyA bhAgavatar (not Mutthuswami Dikshitar)
ReplyDeleteAlso the last line is "AsAmbara harikEsa vilAsE.." There is the signature of HMB (harikEsa).
DeleteIn the song "kaliyuga varadan", you give the first line of caraNam as "kaN mudaR kaDavuLin". The actual phrase is " KaN nudaR kaDavuLin..". nudal in Thamizh means forehead. It refers to Lord Shiva (who has the third eye on his forehead). The description is of Murugan in Pazhani as the son of Lord Shiva who has the third eye on his forehead (nudal).
ReplyDeleteIn "eppaDip pADinArO.." in the caraNam it is "aruTjOti vaLLalum.." (வள்ளலும்)not "vallalum" (வல்லலும்)as given.
ReplyDeleteகற்பகவல்லி நின் பொற்பதங்கள் பாடலை இயற்றியவர்
ReplyDeleteயாழ்ப்பாணம் என். வீரமணி ஐயர்
ஹிமகிரி தனயே
ReplyDeleteமுத்தைய பாகவதர் பாடல்.
Thanks, for providing my requirements
ReplyDeleteEnnai katharulvathoru barama Sri. Papanasam sivan hemavathy lirics in tamil
ReplyDeleteI am in need. Please
ReplyDelete