Narayanan and Karpagam

Narayanan and Karpagam
Narayanan and Karpagam

Tuesday, May 25, 2010

கண்டேன் கமலாலயம்

பல்லவி

கண்டேன் கமலாலயம், திருவாரூரில் வாழும் தியாகேசன் தரிசனம் ,

(கண்டேன் கமலாலயம்)

அனுபல்லவி

சுற்றுப் பிரகாரத்தில் கல்லுத்தேர் அழகும் சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலும்
சுற்றி அறுபத்துமூவர் வசித்திட சொல்லுக்கடங்காத சிவலிங்கத் தரிசனம் - கண்டேன் கமலாலயம்,

சரணம்

ஜெகமெங்கும் புகழ்பெற்ற தியாகேசன் தரிசனம் ஜென்ம சாபல்ய பாபவிமோசனம்
தேவி கமலாம்பாள் பாத தரிசனம் சேவித்த பேர்க்கு ஜென்ம சாபல்யம். - கண்டேன் கமலாலயம்,

சந்தியா காலத்தில் சனிப் பிரதோஷத்தில் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்திட
சகல பேரும் வந்து வணங்கிட சக்தி வெண்சாமர கற்பூர ஹாரத்தி - கண்டேன் கமலாலயம்,

2 comments:

  1. ங்கே'நானொரு விளையாட்டு' வரிகளைத் தேடி இங்கே வந்து சேர்ந்தேன்.

    சூப்பர், மிக நல்ல முயற்சி!

    ReplyDelete